Trending News

மழையுடனான காலநிலை நாளையிலிருந்து சிறிது குறைவு

(UTV|COLOMBO)-வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட “TITLI” என்ற சூறாவளிக் காற்றானது இன்று வட அகலாங்கு 16.00 பாகை மற்றும் கிழக்கு நெடுங்கோடு 85.80 பாகைகளுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இத்தொகுதியானது திருகோணமலைக்கு 1050 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளதுடன் மேலும் பலமடைந்து வடமேற்கு திசையில் இந்தியாவின் ஆந்திரப்பிரதேசக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து சிறிது குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய, தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Instagram’s Co-Founders Said to Step Down From Company

Mohamed Dilsad

Twenty-two would be illegal immigrants arrested

Mohamed Dilsad

දිවයින පුරා ඡන්ද ප්‍රතිශතය 80 % ක්

Mohamed Dilsad

Leave a Comment