Trending News

மகா சிவராத்திரி அனைத்து மக்களுக்கும் அர்த்தபூர்வமான வாழ்வுக்கு வழிகாட்டக் கூடியதாகும் – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – மகா சிவராத்திரி இந்து பக்தர்களுக்கு போன்றே அனைத்து மக்களுக்கும் அர்த்தபூர்வமான வாழ்வுக்கு வழிகாட்டக் கூடியதாகுமென்று பிரதமர் ரணில் விக்கிமசிங்க மகா சிவராத்திரி தினத்தைமுன்னிட்டு விடுத்துள்ள   விசேட செய்தியில் தெரிவித்துள்ளார்.

மகா சிவராத்திரி தினத்தைமுன்னிட்டு விடுத்துள்ள   விசேட செய்தியில் பிதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிவபெருமானுக்கு மிகவும் விருப்பமான இரவாக சிவராத்திரி கருதப்படுகிறது. மகா சிவராத்திரி தினத்தை குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என அனைவருடனும் ஒன்றிணைந்து, ஒரே மனதுடன் மகிழ்ச்சியாகக் கெண்டாடுவது இந்து பக்தர்களின் வழக்கமாகும்.

இத்தினத்தில் உபவாசம், தியானம் மற்றும் சிவபெருமானை வணங்குதல் என்பவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், சிவராத்திரி முழுவதும் விழித்திருந்து புண்ணிய கருமங்களில் ஈடுபட்டு, அர்த்தபூர்வமாக அதனைக் கழிப்பதன் ஊடாக ஆன்மீக விடுதலை கிடைக்கும் என்பது இந்து பக்தர்களின் நம்பிக்கையாகும். சிவபெருமானின் நடனம் இடம்பெற்ற தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரியில் இந்து கலாசார, கலை நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

சமய சிந்தனை, இலக்கியம், கலை போன்ற அனைத்துத் துறைகளினதும் ஒருமைப்பாட்டுடன், ஒன்றிணைவு மற்றும் சகவாழ்வினுள் ஆன்மீக விடுதலையை எதிர்பார்க்கும் மகா சிவராத்திரி தினமானது, இந்து பக்தர்களைப் போன்றே அனைத்து மக்களுக்கும் அர்த்தபூர்வமான வாழ்வுக்கு வழிகாட்டக் கூடியதாகும்

உலகவாழ் அனைத்து இந்து மக்களுக்கும் அர்த்தபூர்வமான மகா சிவராத்திரி தினமாக அமையட்டும் என உளப்பூர்வமாகப் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஐ.எஸ் தீவிரவாதம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும்-ஜனாதிபதி

Mohamed Dilsad

Water price hike proposed for 2020

Mohamed Dilsad

US says Idlib strike kills 100 al-Qaeda fighters

Mohamed Dilsad

Leave a Comment