Trending News

காமினி செனரத்தின் வழக்கு 23ம் திகத்திக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை மீண்டும் எதிர்வரும் 23ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று(15) உத்தரவு பிறப்பித்துள்ளது.

லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கென்வில் ஹோல்டிங்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது நீதிபதிகள் குழாமான, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் விஜேரத்ன, சம்பத் அபேகோன் மற்றும் ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று(15) குறித்த இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஒரு வருடம்

Mohamed Dilsad

விமான பைலட் ஆகும் நடிகை ஸ்ரீதேவி மகள்

Mohamed Dilsad

பென் ஸ்டார்க்ஸ் மீதான விசாரணையின் தீர்ப்பு இன்று

Mohamed Dilsad

Leave a Comment