(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோதமான முறையில் கடல் வழி மூலமாக நியுசிலாந்து பயணிக்க முயற்சித்துள்ள 18 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நீர் கொழும்பு – லேல்லம பிரதேசத்தில் குறித்த நபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு ஒன்றின்போது 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.