Trending News

பிரபல ஊடகவியலாளர் கொலை

(UTV|COLOMBO)-சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் காணப்படுவதாகவும் துருக்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சௌதி தூதரகத்தில் நேற்று (16) துருக்கி மற்றும் சௌதி அதிகாரிகள் இணைந்து தேடுதல் நடத்தினர்.

தேடுதலின் பிரகாரம், ஜமால் கஷோக்கியை தூதரகத்திற்குள்ளேயே சௌதி முகவர்கள் கொலை செய்து அவரது சடலத்தை அங்கிருந்து அகற்றியுள்ளனர் என துருக்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கஷோக்கியை கொலை செய்தவர்கள் முரட்டுத்தனமான கொலையாளிகள் என கடுமையாக சாடியுள்ளார். குறித்த கொலைக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சௌதியை தண்டிக்க நேரிடுமென ஏற்கனவே அவர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கஷோக்கியின் கொலை தவறாக நடந்துவிட்டது என குறிப்பிடுவதற்கு சௌதி அரேபியா தயாராகி வருகின்றதென சீ.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இதற்கு சௌதி எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கடந்த 2 ஆம் திகதி இஸ்தான்புல்லிலுள்ள சௌதி தூதரகத்திற்குச் சென்ற ஜமால் கஷோக்கி அதன் பின்னர் காணாமல் போயிருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக உலக நாடுகள் சவுதி மீது கடும் கண்டனத்தை வெளியிட்டு வந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதாக துருக்கி உறுதிப்படுத்தியுள்ளது.


சவூதி அரேபியாவின் பிரபல ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி இஸ்தான்புல்லிலுள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

China asks N Korea to stop missile tests

Mohamed Dilsad

Robert Patrick joins Soderbergh’s “Laundromat”

Mohamed Dilsad

Litro assures steady LP gas supply

Mohamed Dilsad

Leave a Comment