Trending News

மாமாவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி…

(UTV|COLOMBO)-பாட்டியின் பாதுகாப்பில் இருந்து 14 வயதுடைய சிறுமி ஒருவர் மாமாவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தந்தை உயிரிழந்ததையடுத்து தாய் வௌிநாடு சென்றதனால் தனது பாட்டியுடன் குறித்த சிறுமி வசித்து வந்துள்ளார்.

2011ம் ஆண்டு முதல் சந்தேகநபர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக பொலிஸ் முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.

37 வயதுடைய குறித்த சந்தேகநபர் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்தேகநபர் வீட்டுக்கு வரவுள்ளதை அறிந்த சிறுமி தங்கையுடன் வனப் பகுதிக்கு சென்று ஒழிந்துகொண்டுள்ளார்.

இதன்போது பொலிஸ் அவசர இலக்கத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து இரண்டு பேரும் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

A decisive meeting between President and Opposition Leader today

Mohamed Dilsad

சஜித் பிரேமதாசவின் விசேட உரை [VIDEO]

Mohamed Dilsad

හිටපු පොලිස්පති දේශබන්දු මාතර අධිකරණයේ පෙනී සිටී

Editor O

Leave a Comment