Trending News

இந்த அரசாங்கத்தை உடனடியாக கலைக்க வேண்டும்…

(UTV|COLOMBO)-இந்த அரசாங்கத்தை உடனடியாக கலைக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த அரசாங்கம் மக்களுக்காக இதுவரையில் எதனையும் செய்யவில்லை.

ஊழல் மோசடிகள், தரகு பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களையே அதிகளவில் இந்த அரசாங்கம் தொடர்பில் கேட்க முடிகின்றது.

நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கின்றது. அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முன்வராமை வருத்தமளிக்கின்றது.

இந்த அரசாங்கம் தொடர்பில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். உடனடியாக அரசாங்கத்தை கலைக்க வேண்டியதே மிகச் சரியான நடவடிக்கையாக அமையும்.

நாட்டு மக்கள் பொதுத் தேர்தல் ஒன்றையே எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

68 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் சேவையில்

Mohamed Dilsad

Parliament prorogued till January [VIDEO]

Mohamed Dilsad

புத்தளம் மாவட்டத்தில் ஆகக்கூடிய மரமுந்திரிகை அறுவடை…

Mohamed Dilsad

Leave a Comment