Trending News

பத்திரிகையாளர் ஜமால் மறைமுக மரண தண்டனைக்கு பலியாகியுள்ளாரா?

(UTV|SAUDI)-சவுதி பத்திரிகையாளர் ஜமால் மறைமுக மரண தண்டனைக்கு பலியாகியுள்ளதாக ஐ.நா.சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

சர்வதேச அளவில் சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சவுதி அரசு வெளியிட்ட தகவல்கள் அனைத்து பொய் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜமால் மறைமுக மரண தண்டனைக்கு பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபையின் ஆக்னஸ் கால்மார்ட் கூறுகையில்,

‘சவுதி பத்திரிகையாளர் ஜமாலுக்கு அளித்திருப்பது மறைமுக மரண தண்டனையாகும். முதலில் ஜமால் தூதரக அலுவலகத்தில் வைத்து கொல்லப்பட்டார். அதுவும் சவுதியின் தூதரக அலுவலகம். இரண்டாவது, ஜமால் கொலையில் தொடர்புடைய அனைவரும் மாயமாகினர்.

அவர்கள் அனைவரும் சவுதியை சேர்ந்தவர்கள். இது அனைத்தும் ஜமால் மறைமுகமாக மரண தண்டனைக்கு பலியாகி இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இது அனைத்திற்கும் சவுதி அரசு தான் காரணம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது’ என தெரிவித்துள்ளார்.

ஜமால் கொல்லப்பட்டதை மறுத்து வந்த சவுதி, சமீபத்தில் துருக்கி வெளியிட்ட தொடர் ஆதாரங்களை தொடர்ந்து அவர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டது. இதனால் சவுதிக்கு சர்வதேச அளவில் நெருக்கடியை அதிகரித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sri Lanka accused of serious corruption in cricket; ICC briefs President, Premier

Mohamed Dilsad

அரச சேவையில் பட்டதாரிகள்

Mohamed Dilsad

நைஜீரிய ஜனாதிபதியாக மீண்டும் முஹம்மது புஹாரி

Mohamed Dilsad

Leave a Comment