Trending News

சர்வதேச சேமிப்பு தினம் இன்று

(UTV|COLOMBO)-இத்தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய சேமிப்பு வங்கியின் ஹப்பன் புலமைப்பரிசில் பரிசளிப்பு விழா இன்று நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, புத்தளம், அனுராதபுரம், கொழும்பு , கம்பஹா உள்ளிட்ட தேசிய ரீதியில் சித்தியடைந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சாதனையாளர்கள் இந்த நிகழ்வில் பாராட்டப்படவுள்ளனர்;.

1924 ஒக்டோபர் 31ஆம் திகதி இத்தாலியின் மிலன் நகரில் பல நாடுகளைச் சேர்ந்த வங்கிகளின் பிரதிநிதிகள் பங்களிப்புடன் சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாடு இடம்பெற்றது

இம்மாநாட்டில் சிக்கனத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஒக்டோபர் 31 ஆம் திகதி சர்வதேச சேமிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இத்தினமானது பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்காகவும், மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.

இன்றைய சேமிப்பு நாளை வாழ்வின் பாதுகாப்பு எனும் கருத்திற்கேற்ப சேமிப்பு பழக்கத்தை தற்கால சிறுவர்களிடமும், இளைய தலைமுறையினரிடமும் ஊக்குவிக்க வேண்டும். இது பெற்றோர்களினதும் பெரியவர்களினதும் கடமையாகும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஹட்டன் நகரின் புத்தர் போதியை உடைத்து கொள்ளை

Mohamed Dilsad

பாடகர் அமல் பெரேர மற்றும் அவரது புதல்வரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Mohamed Dilsad

சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 9 இலிருந்து 6 ஆக குறைக்க உத்தேசம்

Mohamed Dilsad

Leave a Comment