Trending News

ரணில் விக்ரமசிங்க சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு இதுவா காரணம்?

(UTV|COLOMBO)-புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் பிரச்சினை இருப்பின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உயர்நீதிமன்றம் செல்ல வாய்ப்பிருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

அதன் பிரதான செயலாளர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருதுவாராயின் அது தொடர்பில் நீதிமன்றம் செல்ல முடியும்.

சட்டபூர்வமான நியமனம் என்ற காரணத்தினாலே அவர் எந்தவித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளாது உள்ளார்.

அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைக்கூடும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்ட ஆலோசனை மற்றும் சட்டபூர்வமான முறையிலே புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சாந்த பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

சட்டம் தொடர்பான நிபுணத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்று அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் சகல செயற்பாடுகளையும் முன்னெடுக்க ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Thundershowers expected today – Met. Dept.

Mohamed Dilsad

அலி ரொஷான் உள்ளிட்ட 07 நபர்களுக்கும் விடுதலை

Mohamed Dilsad

Person shot dead in Embilipitiya

Mohamed Dilsad

Leave a Comment