(UTV|COLOMBO)-உடனடியாக பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய அமெரிக்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹேதர் நயட் தனது டுவிட்டர் பக்கத்தில், பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு ஏற்படும் தாமதம் இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
நாட்டினுள் நல்லாட்சி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையின் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பில் கவலையடைவதாக பிரித்தானியா கூறியுள்ளது.
இலங்கையின் பிரதமராக யாரை ஏற்றுக் கொள்வது என்பது சம்பந்தமாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் எழுந்த கேள்விக்கு பிரித்தானியாவின் ஆசிய பசிபிக் பிராந்திய அமைச்சர் மார்க் பீல்ட் இவ்வாறு கூறியுள்ளார்.