(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தின் பங்கோர் பல்கலைக்கழகத்தில் கல்விக் கற்றுவந்த இலங்கை மாணவி ஒருவர் இன்றைய தினம் நாடுகடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
த இன்டிபென்டன்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஷிரோமினி சற்குணராஜா என்ற அவர் தற்போது பெட்போர்ட்செயார் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு அவரது தந்தையின் மாணவர் விசாவின் கீழ் தங்கி வசிப்பவர் என்ற அடிப்படையில் அவர் இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார்.
2011ஆம் ஆண்டு அவரது தந்தை காலமானார்.
பின்னர் அவரும் அவரது தாயும், மாணவியின் உயர்கல்வி நிறைவடையும் வரையில் பிரித்தானியாவில் தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டது.
தற்போது அவர் முழுமையான மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்திருந்த போதும், அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே அவரை நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எனினும் இந்த நாடுகடத்தல் நடவடிக்கையை தடுப்பதற்கு இணையத்தளம் ஊடாக மனு ஒன்று கைச்சாத்திடப்பட்டு வருகிறது.