Trending News

கஜ சூறாவளி – யாழ்குடாநாட்டில் அடைமழை

(UTV|COLOMBO)-“GAJA” என்றசூறாவளிவலுவடைந்து இலங்கைக்கு வடகிழக்காககாங்கேசன்துறையிலிருந்து 700 கி.மீதூரத்தில்நிலைகொண்டுள்ளது.

இதுஅடுத்துவரும் 24 மணித்தியாலங்களில்மேற்கு-தென்மேற்குதிசையில்நகர்ந்துபாரியசூறாவளியாக மாறக்கூடிய சாதத்தியம் காணப்படுகின்றது.

இத்தொகுதியின்தாக்கம்காரணமாக பொத்துவிலில் இருந்து திருகோணமலை காங்கேசன்துறை ஊடாகமன்னார் வரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில்காற்றின்வேகம் அதிகரிப்பதோடு கடலும் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

மீனவர்கள் பொத்துவிலிலிருந்து திருகோணமலை – காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடலில் மீன்பிடிநடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தவிர்த்துக்கொள்ளுமாறு      வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள்.

முல்லைத்தீவிலிருந்து  காங்கேசன்துறைவரையான ஆழம்கூடிய கடற்பரப்புகளில் மழையோ இடியுடன் கூடியமழையோ பெய்வதற்கானசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச்சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்குவரையானதிசைகளிலிருந்துவீசக்கூடும்.

நாட்டைச்சூழவுள்ளகடற்பரப்புகளில்காற்றின்வேகமானதுமணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர்வரைகாணப்படும்.

நாட்டின் வடக்கு,மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோமீற்றர்வரைஅதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

தென்கரையோரத்திற்குஅப்பாற்பட்டகடற்பரப்புகளில்காற்றின்வேகமானதுஅவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன்கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

 

 

 

Related posts

Special Commodity Tax on big onions and potatoes increased

Mohamed Dilsad

பிரபுதேவா படத்தில் பாகுபலி வில்லன்

Mohamed Dilsad

Maiden cabinet meeting day after tomorrow

Mohamed Dilsad

Leave a Comment