Trending News

மழை அல்லது இடியுடன் கூடிய மழை….

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

 

 

Related posts

நான் விலகுவதே அனைவரதும் விருப்பம்?

Mohamed Dilsad

වඳුරු උණ ඉන්දියාවටත් : නවතම ප්‍රභේදයක ආසාදිතයෙක් හමුවෙයි.

Editor O

Railway trade unions Strike called off

Mohamed Dilsad

Leave a Comment