(UDHAYAM, COLOMBO) – இலங்கையை சுற்றிலும் வளிமண்டல இடையூறுகள் காணப்படுவதனால் அடுத்த சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடற்கரைபிரதேசங்கள் மற்றும் நாட்டை சூழவுள்ள பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான கடற்கரை பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும் என்றும் வடக்கு கிழக்கு பகுதிகளில் காற்று 30-40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முகில்கள் சூழந்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை நாட்டின் பல பகுதிகளில் எதிர்பார்ப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து மன்னார் புத்தளம் வழியாக ஹம்பாந்தோட்டை பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு வழியாக காலி திருகோணமலை கடற்கரை பகுதிகளுக்கு காற்றின் வேகம் 50-55 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு ஊவா சப்ரகமுவ மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் மணிக்கு சுமார் 50 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி காணப்படும்.
கடற்பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை அதிகமாக காணப்படுவதால் 55-60 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தில் காற்று வீசும் என்றும் திணைக்களம் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.