Trending News

நாட்டின் பல பிரதேசங்களில் மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று(26) பிற்பகல் வேளையில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல், மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, கொழும்பிலிருந்து காலி ஊடாக வரையான கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

Bhutan says no confirmation on trafficking involving Lankans

Mohamed Dilsad

Academy voices solidarity with ‘Last Men …’ team

Mohamed Dilsad

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment