Trending News

மழையுடன் கூடிய காலநிலை…

(UTV|COLOMBO)-மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

 

 

 

Related posts

‘Govt running Kantale Sugar factory is futile’

Mohamed Dilsad

காலநிலை

Mohamed Dilsad

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பிணையில் விடுதலை

Mohamed Dilsad

Leave a Comment