(UDHAYAM, COLOMBO) – அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
ஹெட்டனில் இருந்து டயகம நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்று தனது பயணத்தை முடித்து கொண்டு தரித்து நிற்பதற்காக சென்ற வேளை அதன் சில்லில் சிக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் குறித்த பேருந்தை செலுத்திய சாரதியின் தந்தை என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் குறித்த சாரதி அக்கரப்பத்தனை காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று நுவரெலிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.