Trending News

காட்டுக்குள் சாகச பயணம் செய்யும் அமலா

(UTV|INDIA)-அமலா பால் நடிக்கும் படம், அதோ அந்த பறவை போல. கே.ஆர்.வினோத் இயக்குகிறார். படம் குறித்து அவர் கூறியதாவது: காட்டில் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டு தவிக்கும் இளம்பெண், தனக்கு ஏற்படும் எதிர்பாராத பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டு தப்பிக்கிறார் என்பது கதை. இதில் நடிக்க துணிச்சலும், உடல் பலமும், காடு பற்றிய பயமும் இல்லாத நடிகை தேவைப்பட்டார். அப்போது அமலா பால் பற்றி சொன்னார்கள். அவர் அடிக்கடி காட்டுக்குள் சாகச பயணம் (டிரக்கிங்) செல்பவர் என்று. எனவே, அவரை ஒப்பந்தம் செய்தோம்.

காட்டுக்குள் தைரியமாக நடித்த அவர், 60 அடி உயர மரத்தில் ஏறி இறங்கினார். வழுக்குப்பாறைகள், காட்டாறுகள், பாறை குகைகள், மரப்பொந்துகள் உள்பட எதுபற்றியும் கவலைப்படாமல் நடித்தார். பல காட்சிளை ஒரே ஷாட்டில் படமாக்கினோம். படப்பிடிப்பு நடக்கும்போது காட்டுக்குள் அடிக்கடி அமலா காணாமல் போய்விடுவார். அடுத்த காட்சிக்காக தனியாக பயிற்சி எடுப்பார்.

 

 

 

 

Related posts

කිණිතුල්ලන් මගින් මිනිස් මොළයට බලපෑම් කළ හැකි නව වෛසරයක් චීනයෙන් හමුවෙයි.

Editor O

தொடரும் மழை

Mohamed Dilsad

Afghanistan: Where the road to peace is harder than war

Mohamed Dilsad

Leave a Comment