Trending News

முன்னாள் ஜனாதிபதியிற்கு இன்னாள் ஜனாதிபதி அஞ்சலி

(UTV|AMERICA)-அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப்பும் அவரது மனைவி மெலானியா ட்ரம்பும் மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ்ஷுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

1924 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி மசட்ச்சூசஸில் பிறந்த ஜோர்ஜ் ஹெர்பர்ட் வோக்கர் புஷ், அமெரிக்காவின் 41 ஜனாதிபதியாக 1989 ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளதுடன், இரு முறை நாட்டின் துணை ஜனாதிபதியாகவும் சேவையாற்றியிருந்தார்.

இதனையடுத்து உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 94 ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழ‍ைமை உயிரிழந்தார்.

தற்போது அவரது சடலம் பொது மக்களின் அஞ்சலிக்காக வொசிங்டனில் வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அவரது சடலத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், அரவது பாரியார் மெனியா ட்ரம்பும் நேற்று சென்று தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

சுமார் அரை மணி நேரமாக அங்கிருந்த அவர்கள் பொதுமக்களிடமோ ஊடகங்களிடமோ எவ்வித கருத்துக்களையும் முன்வைக்காது அதன் பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்னர்.

 

 

 

 

Related posts

පෞද්ගලික අංශයේ සේවකයින්ට අවම වැටුප දෙසැම්බර් වනතුරු

Mohamed Dilsad

அளுத்கம ஸ்ரீ தம்மானந்த தேரர் தனது 103 ஆவது வயதில் காலமானார்

Mohamed Dilsad

International Space Station to be visible in Sri Lanka today

Mohamed Dilsad

Leave a Comment