Trending News

சற்று முன்னர் பாராளுமன்றம் கூடியது

(UTV|COLOMBO)சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (05) காலை 10.30 மணிக்கு ஆரம்பமானதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறினார்.

இதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையி கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் நிகழ்ச்சி நிரலை மாற்றி தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தரப்பினர் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

இன்றைய பாராளுமன்ற அமர்வினையும் தாங்கள் புறக்கணிக்க போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Cuba’s Raúl Castro hands over power to Miguel Díaz-Canel

Mohamed Dilsad

விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக பரவிவரும் வைரஸ்

Mohamed Dilsad

Australia to confront past as ball-tampering bans expire

Mohamed Dilsad

Leave a Comment