Trending News

‘கனா’ உடன் மோதும் 5 படங்கள்

(UTV|INDIA)-சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா’. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கணையாக நடித்திருக்கிறார். அவரது அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற டிசம்பர் 21-ஆம் திகதி  ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே விஜய் சேதுபதியின் சீதக்காதி, தனுஷின் மாரி-2, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட 4 படங்களும் டிசம்பர் 20, 21-ஆம் திகதிகளில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் கனா படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 4 படங்களுக்கு திகதி ஒதுக்குவதிலே பிரச்சனை இருக்கும் நிலையில், கனா படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related posts

Discount bonanza from SriLankan

Mohamed Dilsad

கோத்தாபய ராஜபக்ஷவின் வாகனம் விபத்து

Mohamed Dilsad

The Rock marries girlfriend Lauren Hashian in Hawaii

Mohamed Dilsad

Leave a Comment