Trending News

அவுஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சரியான முறையில் விளையாடததினால் இந்தியா தடுமாறியது.

கடுமையாகப் போராடிய புஜாரா சதம் அடித்து அணியின் ஓட்டங்களை ஓரளவுக்கு உயர்த்தினார். நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்கள என்ற நிலையில் இருந்தது. ஷமி 6 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் பந்திலேயே ஷமி ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் 250 ஓட்டங்களுக்கு முடிவுக்கு வந்தது. அவுஸ்திரேலியா தரப்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ், லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்கை தொடங்கியது. துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச், முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அவரது விக்கெட்டை இஷாந்த் சர்மா கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னர் ஹரிஸ் – கவாஜா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அணி 45 ஓட்டங்களை எட்டியபோது, அஸ்வின் பந்தில் ஹரிஸ் ஆட்டமிழந்தார். அவர் 26 ஓட்டங்கள் சேர்த்திருந்தார். அவரைத் தொடர்ந்து ஷான் மார்சையும் அஸ்வின் வீழ்த்தினார். இதன்மூலம் 59 ஓட்டங்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து கவாஜாவுடன் இணைந்த ஹேண்ட்ஸ்காம்ப் மிகுந்த எச்சரிக்கையுடன் பந்துகளை கையாண்டார். 40 ஆவது ஓவரில் கவாஜாவின் விக்கெட்டையும் அஸ்வின் கைப்பற்றினார். அப்போது அவுஸ்திரேலியாவின் 87 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

 

 

 

 

Related posts

“Today marks a victory for democracy and sovereignty,” Premier says

Mohamed Dilsad

போலி நாயணயத் தாள்களுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

Huawei signs deal to develop 5G in Russia

Mohamed Dilsad

Leave a Comment