Trending News

பாராளுமன்ற குழப்பம் தொடர்பான விசாரணைகள் குற்றப்பலனாய்வு பிரிவிடம்…

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில்  கடந்த மாதம் இடம்பெற்ற குழப்ப நிலைத் தொடர்பில் விசாரணை செய்ய  குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை, மிளகாய்த் தூள் வீசப்பட்டமை, பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்​டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தற்போது பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சபாநாயகர் கரு ஜயசூரியவின் கையொப்பத்துடன் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

Price Change in Gas Soon?

Mohamed Dilsad

மண்சரிவு அபாயம் -50 குடும்பங்கள் வெளியேற்றம்

Mohamed Dilsad

அடுத்த வாரம் நெல் கொள்வனவுக்கான நடமாடும் சேவை ஆரம்பம்…

Mohamed Dilsad

Leave a Comment