Trending News

சுற்றிவளைப்பில் 1400 க்கும் அதிகமான சாரதிகள் கைது

(UTV|COLOMBO)-பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் மதுபோதையுடன் வாகனத்தை செலுத்திய ஆயிரத்து 400 க்கும் அதிகமான சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில். மதுபோதையுடன் கைது செய்யப்பட்ட சாரதிகளின் எண்ணிக்கை அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில், வாகன போக்குவரத்து தொடர்பில், சாரதிகளிடமிருந்து 2 ஆயிரத்து 505 மில்லியன் ரூபா அபராத பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

42,100 Kg of rice caught in Pettah market

Mohamed Dilsad

வரட்சியானதுமான வானிலை

Mohamed Dilsad

பெண்களுக்கு தனியான இட வசதி…

Mohamed Dilsad

Leave a Comment