Trending News

வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு இராணுவத்தினரால் அனர்த்த பணிகள்

(UTV|COLOMBO)-கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 2968 பொது மக்களுக்கு மாவட்ட செயலகத்தின் அனுசரனையுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் ஒத்துழைப்புடன் அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கான பிரதேசங்களான இரத்தினபுரம், ஆனந்தபுரம், கனகாம்பிகை குளம், மரதனகர், தர்மபுரம், புளியங்பொக்கனை, பரந்தன், குடியிருப்பு, உரியன், கன்டாவலி, மாங்குளம், மணக்கண்டல், கவலக்கண்டை, கொடைகலு, கஜங்கரத்னபுரம், விடியபுரம், உடையார்கட்டு, குருவில்குளம் போன்ற பிரதேசங்களில் இந்த அனர்த்த பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது தலைமையில் கிளிநொச்சி பிரதேசங்களில் 7 ஆவது இலேசாயுத காலாட் படையணி, 9 ஆவது விஜயபாகு காலாட் படையணி, 1 ஆவது சிங்கப் படையணி, 15 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த 230 படை வீர ர்களது பங்களிப்புடன் இந்த அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கிளிநொச்சி படையினரால் சனிக் கிழமை ஓலுமடு மற்றும் புளிமுச்சுன்னாகுளங்களில் ஏற்பட்ட நீர்வீழ்ச்சி வெளியேறுவதை தடுக்கும் முகமாக 574 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 3 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த 47 இராணுவத்தினரது பங்களிப்புடன் அனைக்கட்டுகள் இட்டு இந்த நீர்வீழ்ச்சியை தடுக்கும் முகமாக செயற்பட்டனர்.

அன்றைய தினமே முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது வழிக்காட்டலின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மணக்கண்டல், கவலாக்கண்டல், கோடைக்களு, கேஜனகரத்னபுரம், வித்யாபுரம், உடையார்கட்டு, குருவில்குளம் பிரதேசங்களில் இராணுவத்தினரால் இந்த அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

 

(இராணுவ ஊடக பிரிவு)

 

 

 

 

Related posts

Sri Lanka Police under President’s purview

Mohamed Dilsad

பாடசாலை மாணவர்களுக்கு போதைவஸ்து விற்பனை செய்தவர் கிளிநொச்சியில் கைது

Mohamed Dilsad

2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Mohamed Dilsad

Leave a Comment