Trending News

பஸ் கட்டணங்கள் நேற்று(26) நள்ளிரவு முதல் குறைப்பு

(UTV|COLOMBO)-எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதற்கு அமைய, அரச மற்றும் தனியார் பஸ்  பயணக் கட்டணங்களும், சொகுசு மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பஸ்  பயணக் கட்டணங்களும் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன.

நூற்றுக்கு 4.2 சதவீதத்தினால் இந்தக் கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், ஆகக் குறைந்த பஸ் பயணக் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.

இதற்கமைய, 12 ரூபா என்ற ஆகக் குறைந்த கட்டணம் அவ்வாறே அறவிடப்படுவதுடன், 15 ரூபா முதல் 29 வரையில் காணப்பட்ட கட்டணங்கள் ஒரு ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 34 ரூபாவாக காணப்பட்ட கட்டணம் 32 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதுடன், 41 முதல் 52 ரூபா வரையான கட்டணங்கள் 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேநேரம், 206 ரூபா பஸ்  பயணக் கட்டணம், 197 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பஸ் பயணக் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, மஹரகம முதல் காலி வரையிலான கட்டணம் 440 ரூபாவாகவும், மஹரகம முதல் மாத்தறை வரையிலான கட்டணம் 550 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

 

 

 

 

 

Related posts

Two Indian and US Naval ships arrive at Colombo Port

Mohamed Dilsad

England hold crisis meeting after another thrashing by Windies

Mohamed Dilsad

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கு விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment