(UTV|COLOMBO)-தற்போது நிலவும் மழையுடனான காலநிலை நாளை முதல் தற்காலிகமாக குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சப்ரமுவ, ஊவா, தென், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
வடமத்திய மாகாணத்திலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் விசேடமாக மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லி மீட்டர் அளவான கன மழையும், மேல் மாகாணத்தில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவான மழையும் பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.