Trending News

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|PHILLIPINES)-பிலிப்பைன்சில் பெய்த கடும் மழையை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடும் மழை காரணமாக அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்து உள்ளன.

மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து அனேக இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. அனேக இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கின. தகவல் சேவை தொடர்பு முடங்கியது.

நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மாயமான 16 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளம், நிலச்சரிவால் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேரழிவு மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

காலிமுகத்திடல் வீதி தற்காலிகமாக மூடல்

Mohamed Dilsad

தகவல் ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை அரச நிறுவனங்களை பாதிக்குமா?

Mohamed Dilsad

ஆசிய பௌதீகவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு வியட்னாம் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு நிதி அன்பளிப்பு

Mohamed Dilsad

Leave a Comment