Trending News

நயன்தாராவை முந்திய காஜல்

(UTV|INDIA)-கங்கனா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் குயின். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.
இதில் தமிழ் மற்றும் கன்னட பதிப்பை நடிகரும், இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார். தமிழில் காஜல் அகர்வால் நடித்துள்ள படத்திற்கு ‘பாரீஸ் பாரீஸ்’ என்றும், கன்னடத்தில் பருல் யாதவ் நடித்துள்ள படத்திற்கு பட்டர்பிளை என்றும் தலைப்பு வைத்துள்ளனர்.
காஜல் அகர்வால் இந்த படத்தில் விருதுநகரைச் சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய படத்தின் டீசரில் ஒரு காட்சியில் காஜல் அகர்வாலை அவரது தோழி பாலியல் ரீதியாக சீண்டுவது போல இடம்பெற்றிருக்கும். இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டீசர் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா படத்தின் டீசரை 60 லட்சம் பேர் பார்த்துள்ள நிலையில், காஜல் அகர்வாலின் இந்த டீசரை 72 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

Related posts

Shah Rukh Khan celebrates 10 years of KKR with AbRam

Mohamed Dilsad

ජාතික ආරක්ෂාව චුට්ටක්වත් බිඳ වැටී නැහැ – මහජන ආරක්ෂක අමාත්‍ය ආනන්ද විජේපාල

Editor O

Dia Mirza in Delhi for UN conference

Mohamed Dilsad

Leave a Comment