Trending News

நிதி அமைச்சரின் அறிவிப்பு

(UTV|COLOMBO)-இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் காபன் வரி அரசின் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் என நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அரச வாகனங்கள் காபன் வரியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் பல்வேறு செய்திகள் வௌியாகியிருந்தன.

இந்நிலையிலேயே , அறிக்கையொன்றை வௌியிட்டு நிதி அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

அனைத்து வானங்களுக்கும் வாகனம் பதிவு செய்யும் ஆண்டை தவிர்த்து வருடாந்தர வாகன வருமான அனுமதி பத்திரம் புதுப்பிக்கப்படும் போது இந்த வரி அறவிடப்படும் என அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

Three turtle catchers nabbed by Navy

Mohamed Dilsad

சஜித்தின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று

Mohamed Dilsad

මෙරට මානව හිමිකම් සම්බන්ධව ඇතිවෙමින් පවතින ධනාත්මක ප්‍රගතිය පිළිබඳව ජගත් මානව හිමිකම් මහකොමසාරිස්ගේ සතුට

Mohamed Dilsad

Leave a Comment