(UTV|COLOMBO)-கல்வியியல் கல்லூரிகளுக்கு இம்முறை 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டு கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு இம்மாத நடுப்பகுதியில் வெளியிடப்படுமென ஆசிரியர் கல்வி பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.
2016 தொடக்கம் 2017ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இம்முறை ஒரேமுறையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
மே மாதத்தில் நாடு முழுவதிலும் உள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
கல்வியியல் கல்லூரிகளுக்கு ஒரே முறையில் பெரும் எண்ணிக்கையானோர் இணைத்துக் கொள்ளப்படுவது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.