Trending News

பசிலுக்கு எதிரான வழக்கு மார்ச் 28 ஆம் திகதி முதல் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை மார்ச் மாதம் 28 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று (21) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் அது தொடர்பான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி வழக்கை மார்ச் மாதம் 28 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் திவிநெகும திணைக்கள நிதியை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

ஒன்று கூடல் நாடாளுமன்றில் சற்று முன்னர் ஆரம்பம்

Mohamed Dilsad

Death toll in Sri Lanka Easter blasts climbs to 359 [UPDATE]

Mohamed Dilsad

அலோசியஸ் மற்றும் கசுனிடம் வாக்குமூலம் எடுக்கமாறு நீதவான் உத்தரவு

Mohamed Dilsad

Leave a Comment