Trending News

காலநிலையில் சிறு மாற்றம்

(UTV|COLOMBO)-அடுத்த சில நாட்களில், ஜனவரி 24ம் திகதியிலிருந்து தற்போது காணப்படும் வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற தாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் மாத்தளை மாவட்டத்திலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

 

 

 

Related posts

ராஜகிரியவில் பேருந்துகளுக்கான தனி ஒழுங்கை ஒத்திகை இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது

Mohamed Dilsad

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர் கொண்டு ஐதராபாத் வெற்றி !

Mohamed Dilsad

National Honours -2017 today at Nelum Pokuna

Mohamed Dilsad

Leave a Comment