Trending News

வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மெசன்ஜர் தொடர்பில் வெளியான செய்தி…!!

வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மெசன்ஜர் ஆகிய அதன் சமூக வலையமைப்பு செய்தி சேவைகளை ஒருங்கிணைக்க ஃபேஸ்புக் திட்டமிட்டு வருவதாக நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள 4 பேரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளபோதும், அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த 3 சேவைகளும் தனித்தனி செயலிகளாக செயல்படுவது தொடர்ந்தாலும், ஆழமான மட்டத்தில், செய்திகளோடு அவை தொடர்புடையதாக இருப்பதால் வேறுப்பட்ட சேவைகளுக்கு இடையில் செயல்படுவதாகவும் அமையும்.

இந்த மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர், ஒரு ஃபேஸ்புக் பயனர் மறையாக்கம் செய்யப்பட்ட செய்தியை வட்ஸ்அப் கணக்கு மட்டுமே இருக்கும் ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும்.

நீண்டதொரு செயல்முறையின் ஆரம்பத்தில் உள்ளதாக ஃபேஸ்புக் தம்மிடம் தெரிவித்ததாக பிபிசி குறிப்பிட்டுள்ளது.

இந்தத் திட்டம் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சாக்கர்பர்க்கின் தனிப்பட்ட பணித்திட்டம் என்றும், இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தப் பணித்திட்டத்தை முடிப்பதற்கு .ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மூன்று சேவைகளை மேலும் பயனுள்ள முறையில் வழங்கவும், இந்த செயலிகளில் மக்கள் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் சக்கர்பர்க் இந்த ஒருங்கிணைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயம்

Mohamed Dilsad

உணவு உற்பத்தியில் மூன்றிலொரு பங்கு விலங்குகளால் வீணடிக்கப்படுகிறது

Mohamed Dilsad

கவுதமாலா எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

Mohamed Dilsad

Leave a Comment