Trending News

வெளிநாட்டில் தொழில் புரியும் பணியாளர்களுக்கு பத்து மில்லியன் வீட்டுக்கடன்

(UTV|COLOMBO)-முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கடன் வழங்கும் திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வௌிநாட்டில் பணிபுரியும் 10 மில்லியன் ரூபா வீடமைப்பு கடன் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இரண்டு வருடங்கள் நிவாரண காலத்துக்கு உட்பட்ட வகையிலும் 15 வருடங்களில் மீளச் செலுத்தும் வகையிலும் இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமக்கான வீடொன்றை நிர்மாணிக்கும் திட்டம் வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் பலருக்கு உள்ளதாக நிதி அமைச்சு கூறியுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ள, கணிசமான தொகையை இலங்கை வங்கிகளில் வைப்பீடு செய்துள்ளவர்கள் கடனுக்காக விண்ணப்பிக்க முடியும்.

கடன் திட்டத்தில் வட்டியில் 75 வீதம் அரசினால் செலுத்தப்படும்.

முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்காக மோட்டார் வாகனங்களை பயன்படுத்தி வாடகை மோட்டார் வாகன சேவைகளை ஆரம்பிக்க 20 லட்சம் ரூபா நிவாரண கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

35 வயதை தாண்டிய, முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

இந்த கடன் திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சர் மங்கல சமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

චීන රොකට්ටුවක් පරීක්ෂණයක් අතරතුර කඩා වැටේ

Editor O

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மலையகம் விஜயம்

Mohamed Dilsad

வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா

Mohamed Dilsad

Leave a Comment