Trending News

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைப்பதற்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் எதிர்ப்பு

(UTV|COLOMBO) பின்தங்கிய பாடசாலைகளுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் அண்மையில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இந்த அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, பின்தங்கிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதற்கான அமைச்சரவை பத்திரமும் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று ஊடக சந்திப்பொன்றில் வைத்து, வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர், தமது சங்கம் அதற்கு எதிர்ப்பை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

ஆசிரியர்களுக்காக பரீட்சை எழுதி சித்தி பெற்ற 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது வேலையற்றுள்ளனர்.

இந்தநிலையில், அமைச்சர் இவ்வாறான ஒரு முடிவை எடுப்பது சிறந்தது அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

Six killed as Colombia boat sinks

Mohamed Dilsad

சீகிரியாவை பார்வையிடுவதற்கான நேர அளவில் மாற்றம்

Mohamed Dilsad

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

Mohamed Dilsad

Leave a Comment