Trending News

லங்கம பாசல ஹொந்தம பாசல திட்டத்தின் கீழ் ஹாரிஸ்பத்துவ தொகுதியில் 2 பாடசாலை கட்டிடங்கள் கையளிப்பு.

(UTV|COLOMBO) “லங்கம பாசல ஹொந்தம பாசல” திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்பட்ட 200 பாடசாலை நிர்வாக கட்டிடங்கள் நேற்று  (01) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டன.

குறித்த திட்டத்திற்கு அமைவாக ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியல் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு நிர்வாக கட்டிடங்கள் நேற்று  முஸ்லிம் சமய விவகாரம், தபால் சேவைகள் தொடர்பான கௌரவ அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் அவர்களால் பாடசாலைகளுக்கு கையளிக்கப்பட்டன.

300 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பூஜாபிடிய தேசிய பாடசாலையின் நிர்வாக கட்டிடமும், 180 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொலபிஹில்ல மத்திய கல்லூரியின் நிர்வாக கட்டிடமுமே நேற்று  கௌரவ அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் அவர்களால் கையளிக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் இரு பாடசாலைகளினதும் அதிபர்கள், பூஜாபிடிய பிரதேச செயலாளர் திருமதி மடஹபொல, கட்டுகஸ்தோட்ட வலய கல்விப் பணிப்பளர் மற்றும் அதிகாரிகள்,பூஜாபிடிய பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் திரு றம்ஸான், ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் திரு லலித் ரனராஜ மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

Related posts

Distribution of voting cards commences today

Mohamed Dilsad

தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

டெக்ஸி மீற்றருக்கான புதிய தராதரம் அறிமுகம்

Mohamed Dilsad

Leave a Comment