Trending News

விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புக்கு அதி நவீன ஆயுதங்கள் கொள்வனவு

(UTV|COLOMBO) பாதாள உலக குழுக்களின் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அதி நவீன ஆயுதங்களை புதிதாக கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் விசேட அதிரடிப்படையினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் கட்டளை அதிகாரி எம்.ஆர்.லதீப் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கான நடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்த அவர் இவை அனைத்தும் வெளிநாட்டில் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ள ஆயுதங்களில் M-16 துப்பாக்கிகள் 500, MP-5 உப இயந்திரத் துப்பாக்கிகள் 250, கைத்துப்பாக்கிகள் 250 என்பன அடங்கியுள்ளன எனவும் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

கூட்டுறவு துறையில் நிலைபேண் அபிவிருத்தி – வியட்னாமில் மாநாடு ஆரம்பம்…

Mohamed Dilsad

Registrar of Companies Department, Labour Department sign MoU

Mohamed Dilsad

ஓய்வு பெறும் ஆர்.பி.சிங்…

Mohamed Dilsad

Leave a Comment