Trending News

2019ம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டம் (நேரடி)

(UTV|COLOMBO) 16:17PM வரவு செலவுத் திட்ட உரை நிறைவு


16:16PM கசினோ உரிமம் 400 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படும்.


16:15PM கடவுச்சீட்டு விநியோகத்திற்கான கட்டணம் ஒரு நாள் சேவை 5000 ரூபாவாலும் சாதரண சேவை 3500 ரூபாவாலும் அதிகரிக்கப்படும்


16:14PM யுத்தகாலத்தில் அழிவடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய 5 பில்லியன் ஒடுக்கீடு


16:13PM புகையிலைக்கான வரி 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை


16:12PM சிகரெட்களுக்கு தேசிய கட்டுமான வரி விதிக்கப்படும். இன்று நள்ளிரவு முதல் சிகரெட் விலை 5 ரூபாவால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


16:10PM வடக்கில்  10 பொருளாதார மத்திய நிலையங்கள். பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக வங்கிகளுக்கு 250 மில்லியன் ஒதுக்கீடு


16:08PM பனை அபிவிருத்திக்கு 5 பில்லியன் ஒதுக்கீடு. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.


16:06PM இராணுவ வீரர்களின் சீருடைக்கான கொடுப்பனவை அதிகரித்தல்


16:05PM கம்பெரலிய திட்டத்தின் கீழ் சமய வழிபாட்டுத்தளங்களை அபிவிருத்தி செய்ய 1 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

சூரிய மின்கலங்களுக்காக மேலதிகமாக 300,000 ரூபா வழங்கப்படும். மடு தேவாலய அபிவிருத்திக்கு 200 மில்லியன் ஒதுக்கீடு


16:03PM இயற்கை அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்காக 20,000 மில்லியன்


16:00PM சமுர்த்தி அபிவிருத்திக்கு 1,000 பில்லியன்


15:59PM கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை.


15:59PM பிளாஸ்ரிக், பொலித்தீன்  உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயம் பதிவு செய்வது அவசியம்.


15:57PM இயற்கை அனர்தங்களால் ஏற்பட்ட  பாதிப்புகளுக்கான நட்ட ஈட்டை துரிதமாக வழங்க நடவடிக்கை


15:56PM கொழும்பை அழகுபடுத்தும் திட்டத்திற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு


15:55PM பொதுமக்களை வலுப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்க சமுர்த்தி தவறிவிட்டது. அது அரசியலாக்கப்பட்டு விட்டது. அரசியல் கூட்டாளிகளின் துணையுடன் பயனாளிகள் தீர்மானிக்கப்படுகிறார்கள். எனவே, இத்திட்டம் மறுசீரமைக்கப்படும். 600,000 புதிய பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கென 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


15:51PM இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன். கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன்.


15:51PM  குடிநீர் திட்டத்துக்காக 45,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு


15:49PM ஓய்வூதிய முரண்பாடுகளை சரி செய்ய 12 பில்லியன் ரூபா ஒதுக்கீடு


15:49PM படைவீரர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும். கமாண்டோக்களின் கொடுப்பனவு 5000 ரூபாவாக உயர்த்தப்படும். வாடகைக் கட்டணம் 100% அதிகரிக்கப்படும். சீருடை கொடுப்பனவு அதிகரிக்கப்படும்.


15:47PM அரச பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 40 பில்லியன் ஒதுக்கீடு


15:46PM ஜூலை முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு


15:45PM அதிக வசதிகளையுடைய ரயில் சேவைகளுக்கு அதிக கேள்விகள் நிலவுகின்றன. இதற்காக 4 புதிய ரயில் பாதைகள் அமைக்ககப்படவுள்ளன. மாலபே- கொழும்பு இலகு ரயில் பாதைக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


15:45PM அரச பணியாளர்களுக்கு 2,500 ரூபாய் அதிகரிப்பும் ஓய்வூதியர்களின் கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வுக் காணவும் நடவடிக்கை. ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு


15:43PM ஓட்டோ, சிறிய கார்களின் போக்குவரத்தை அதிகரிக்க கடன் திட்டமுறையொன்று அறிமுகப்படுத்தப்டவுள்ளது. அதற்கமைய தற்போதைய பாவனையிலுள்ள ஓட்டோக்கள் அகற்றப்பட வேண்டியுள்ளது


15:41PM 2016 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்துக்கமைய, அரச பணியாளர்களின் சம்பளம் 107 சதவீத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  மேலும் சம்பள தொகையை அதிகரிக்க 4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.


15:29PM இலங்கை போக்குவரத்து சேவைக்கு 250 புதிய பஸ்கள், இத்திட்டத்திற்கு 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.


15:39PM கிராம  வீதிகளை புனரமைப்பு செய்ய 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு


15:38PM மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பஸ் சேவைகளுக்கு முற்கொடுப்பனவு அட்டைகள் மற்றும் GPS சேவைகள் ஆரம்பிக்கப்படும்.


15:37PM கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு


15:36PM பொது போக்குவரத்து சேவை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் பஸ் சேவை அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


15:36PM போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், நகர வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு பழைய கட்டடங்களை புனரமைக்க நடவடிக்கை


15:35PM யாழ்ப்பாணம் பழைய நகர சபையை புனரமைப்பு செய்ய 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. கண்டியை அபிவிருத்தி செய்ய தற்போது 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


15:34PM கொழும்பில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் 10,600 மில்லியன் ஒதுக்கீடு.


15:33PM அருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7000 மில்லியன் ஒதுக்கீடு.


15:33PM போகம்பரை சிறைச்சாலை பொது இடமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கென 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


15:30PM தேசிய ஒலிம்பிக் நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை


15:29PM சுவசெரிய திட்ட அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு (2 ஆண்டுகளுக்கு மேல்)


15:29PM கொலன்னாவ மற்றும் அலுவிகார விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன்


15:28PM தேசிய தொழில் தகுதியுடனான (NVQ) தொழிற்பயிற்சித் திட்டங்களை இலங்கை இராணுவம் நடத்தவுள்ளது.


15:25PM தமிழ் மொழி ஆசிரியர்களுக்கான பயிற்சிகளுக்கு 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு


15:25PM சுகாதார துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 24,750 மில்லியன் ஒதுக்கீடு


15:23PM   க.பொ.த உயர் தரத்தில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு வௌிநாட்டில் பயில நிதியுதவி வழங்கப்படும்.

ஆகஸ்ட்டில் இத்திட்டம் 14 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்படும். ஹார்வர்ட், ஒக்ஸ்ஃபோர்ட் மற்றும் MIT போன்ற பல்கலைக்கழகங்களுடன் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் இலங்கை மாணவர்கள் கல்வியை முடித்துக்கொண்ட பின் இலங்கையில் 10 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.


15:21PM விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்க நடவடிக்கை


15:20PM பொருளாதார அபவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்ளடக்கம்.


15:19PM  3இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றினாலும்  35,000  மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர். ஏனை​யோர் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பிருந்தும் நிதி வசதி இல்லாமல் கல்வியைத் தொடர  முடியாதவர்களுக்கு ‘ மை பியுச்சர்’ என்ற திட்டத்தின் கீழ்  1.1 மில்லியன் ரூபாய் வட்டியற்ற கடன் வழங்கப்படும் .


15:19PM பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை அதிகரிக்க 32,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு


15:18PM பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீ


15:17PM கம்பெரலிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 48,000 மில்லியன் ஒதுக்கீடு


15:15PM ருஹூணு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடமொன்றை நிறுவ நடவடிக்கை


15:14PM நிபந்தனையுடன் வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர வாய்ப்பு. 10 வருடங்கள் இலங்கையில் தொழில்புரிய வேண்டும் என்பது கட்டாயம்..


15:14PM 400,000 டொலர்களுக்கும் மேல் முதலீடு செய்த வௌிநாட்டவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு குடியிருப்பு விசா


15:13PM இலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு


15:12PM உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களுடன் இணையாமல், வௌிநாட்டு கட்டுமான நிறுவனங்களால் உள்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களைப் பெற முடியாது


15:10PM கல்வித் துறைக்கு 32 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு


15:10PM தகவல் தொழிநுட்ப சேவை தொழிற்றுறைக்கு கலைப்பட்டத்தாரிகளை இணைத்துக்கொள்வதற்காக 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது


15:09PM  SLTDA -இல் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மாத்திரம் 2020 ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஒன்லைன் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.


15:07PM சகல உற்பத்திகளினதும் தரத்தை உயர்த்த நடவடிக்கை


15:07PM சுற்றுலா: பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு வௌிநாட்டு நாணய பற்றுச்சீட்டுகளுக்கு NBT நீக்கம்.


15:06PM  தனியார் நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னர் தேசிய வருமான சட்டத்தில் தேவையான திருத்தத்தை மேற்கொள்ளுதல்


15:05PM நிதி அமைச்சில் வருவாய் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்படவுள்ளது.


15:04PM இயந்திரங்களுக்கான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் வரி விதிப்பு 2.5% குறைக்கப்படும்.


15.03PM உள்நாட்டு வருமான சட்டமூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.


15.01PM அம்பேபுஸ்ஸ, வீரவில ஆகிய இடங்களில் இரண்டு விவசாய நிலங்களை சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து அமைப்பதற்கும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கைவினைப் பொருட்களை செய்யும் மத்திய நிலையம் ஒன்று தொம்பே கிராமத்தில் அமைக்கப்படவுள்ளதுடன், இதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


15.ooPM வடக்கில் முஸ்லிம்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை


15.OOPM தேசிய ஏற்றுமதி மூலோபாயத்திற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு


14:57PM தனியார் நிறுவனங்களும் பிரசவ விடுமுறையை 3 மாத காலம் வழங்கும் வகையில் வழிவகைகளை செய்தல்.


14:54PM 250 க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையத்தை அமைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு என்டபிரைஸஸ் ஸ்ரீ லங்காவின் கீழ் பாதுகாப்பு நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை


14:53PM வெளிநாட்டில் தொழில்புரிவொருக்கு சீனமாளிகா கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.


14:53PM புதிதாக மணம் முடித்தவர்களுக்கான கடன் திட்டம்

முதல் வீட்டை வாங்கும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான சலுகை கடன்கள் வழங்கப்படும். 6% வட்டி விகிதம், 25 ஆண்டுகளில் செலுத்தப்பட வேண்டும்.


14:51PM வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அத்துடன் அங்குள்ள மக்களுக்காக வீடமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க 24 பில்லியன் ஓதுக்கீடு


14:49PM சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்


14:47PM சிறுநீரக நோயாளர்களுக்கு 1800 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு


14:46PM அங்கவீனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை


14:45PM மொரகாகந்த, களுகங்கை திட்டங்களை அடுத்தாண்டு நிறைவு செய்ய எதிர்பார்ப்பு 


14:45PM நாட்டில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஒரு கோப்பை பால் இலவசமாக வழங்கப்படும்


14:40PM புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு அவை தனியாருக்கு நிர்வகிக்க கொடுக்கப்படும்.


14:39PM 100,000 க்கு மேற்பட்டோருக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. மொனராகலையில்  மாத்திரம் 35,000 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. கடந்த அரசாங்கம் இதனை கவனிக்கவில்லை. இந்த வருடம் சகலருக்கும் கழிப்பறை வசதிகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் 4 பில்லியன் ஒதுக்கீடு


14:34PM   மீன் ஏற்றுமதி மூலம் 209 மில்லியன் ரூபாய் இலாபம் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது.


14:33PM பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பில், தேயிலை சபையுடன் கலந்துரையாடி விரைவானத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை


14:31PM கறுவாப்பட்டையை  ஏற்றுமதி செய்யும் வகையில், அத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு 75 மில்லியன் ரூபாய் ஒதுக்க நடவடிக்கை


14:30PM தேசிய இளைஞர் சேவைகள் சபையின் உறுதிப்படுத்தப்பட்ட பயனாளிகளிகளுக்கு என்டபிரைஸஸ் கடன் திட்டத்தை பெற்றுக்​கொடுக்கும் போது முக்கியதுவம் வழங்கப்படும். இதுவரை 60,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


14:29PM  இறப்பர் உற்பத்திக்கு 800 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் தெங்கு உற்பத்தியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை


14:28PM விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க 250 பில்லியன் ஒதுக்கப்படும். அநுராதபுரம், குருநாகல், புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நடவடிக்கை மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவிப்பு.


14:25PM சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகர்களை ஊக்குவிக்க நடவடிக்கை


14:21PM   என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை. இதன் மூலம் கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை


14:19PM   கடந்தாண்டு அரசியல் சூழ்ச்சியால் முதலில் நிறுத்தப்பட்டது கம்பெரலிய வேலைத்திட்டம்


14:10PM    2019 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தற்போது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுகின்றது.


14:02PM   2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

 

 

 

Related posts

மகன் செலுத்திய பேருந்தில் சிக்கி தந்தை பலி

Mohamed Dilsad

ජනාධිපති සිහින දකින අය පක්ෂය හැර ගියද සමගි ජනබලවේගය සමගිව ඉදිරියට යනවා.

Editor O

දූෂණ-වංචා කළ අයට නීතිය ක්‍රියාත්මක කරනවා – විපක්ෂ නායක

Editor O

Leave a Comment