Trending News

உலக அரசியலில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு இலங்கையே…

(UTV|COLOMBO) உலக அரசியலில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு என்ற பெயரைப் பெற்றிருக்கும் இலங்கை, அநேக ஆசிய நாடுகள் வாக்குரிமையை வென்றெடுப்பதற்கு நிறைவேற்றதிகாரம் கொண்ட முதல பெண் ஜனாதிபதியையும் உருவாக்கிய பெருமையை பெற்றிருக்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

பெண் என்பவர் அகிம்சையின் மறுவுருவம் என மகாத்மா காந்தி கூறியிருக்கின்றார்.இருப்பினும் சமூகத்தினால் பெண்ணுக்கு உரித்தாக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய பாத்திரத்திற்கு அப்பால் சென்று அவளால் சிகரத்தை அடைய முடியும் என நவீன பெண்ணானவள் தனது செயற்பாடுகளில் மூலம் நிரூபித்திருக்கின்றாள்.

உலக அரசியலில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு என்ற பெயரைப் பெற்றிருக்கும் இலங்கை, அநேக ஆசிய நாடுகள் வாக்குரிமையை வென்றெடுப்பதற்கு நிறைவேற்றதிகாரம் கொண்ட முதல பெண் ஜனாதிபதியையும் உருவாக்கிய பெருமையை பெற்றிருக்கின்றது.

கடந்த வருடம் பிபிசி உலக சேவையின் மூலம் பட்டியலிடப்பட்ட உலகத்தினர் மீது தாக்கத்தை செலுத்தக்கூடிய பெண்கள் வரிசையில் கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய விஞ்ஞானி, புற்றுநோய் கலங்களைக் கட்டுப்படுத்தத்தக்க சாதகமான மருத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்ட இலங்கையின் பெண் மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆகியோரும் இடம்பிடித்து உலகத்தின் கௌரவத்திற்கு ஆளானார்கள்.

அத்தோடு எவரெஸ்ட் உச்சியை எட்டிய பெண்களின் வரிசையில் கடந்த வருடம் இலங்கை பெண்மணி ஒருவரும் இணைந்து கொண்டமையும் இலங்கைக்கு கிடைத்த ஒரு பெருமையாகும்.

இவை எமது நாட்டுக்கு எதேச்சையாக கிடைத்த பெருமையல்ல. போசாக்குமிக்க உணவு, கல்வி, சுகாதார வசதிகள் ஆகியவற்றை பெற்றுகொள்வதற்கும் சமூக, கலாசார அரசியல் உரிமைகளை அனுபவிப்பதற்கும் ஒரு ஆணுக்கோ அல்லது ஆண் பிள்ளைக்கோ இருக்கும் உரிமைக்கு சமமான உரிமையே பெண்ணுக்கும் பெண் பிள்ளைக்கும் இருக்கின்றது என்பதை ஒரு நாடு என்ற வகையில் ஏற்று, அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கான வேலைத் திட்டஙகளை செயற்படுத்தியதன் விளைவே ஆகும்.

ஆயினும் அவை இத்தோடு நிறுத்தப்பட வேண்டியவை அல்ல.

சமூகத்தில் பெண்ணுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிராக எழும் சகல வன்முறைகளையும வேறுபாட்டை வெளிப்படுத்தும் பெண் பிள்ளைகளுக்கும் எதிராக எழும் சகல வன்முறைகளையும் வேறுபாட்டை வெளிப்படுத்தும் பராமரிப்புகளையும் அடியோடு அகற்றுவதற்கும் சமமானவர்கள் என்ற வகையில் வருமானங்களை ஈட்டுவதற்கும் அது பற்றிய தீர்மானங்களை எடுப்பதற்கும் அரச சேவையில் உச்சியை அடைந்தது போல் அரசியல் தீர்மானங்களை இயற்றும் இடங்களிலும் முதலிடம் வகிப்பதற்கும் அத் தீர்மானங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் இலங்கை பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

அத்தகையதோர் உயரிய நிலைமைக்கு இலங்கை பெண்களை கொண்டு செல்லும் இலக்குடன் இலங்கையில் கொண்டாடப்படும் மகளிர் தின கொண்டாட்டத்திற்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து  செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Related posts

2019 ஆஸ்கர் திரைப்பட விருது விழா– சிறந்த நடிகர், நடிகைக்கான விருது…

Mohamed Dilsad

අවුරුදු 30ක ට පසු පලාලි – අච්චුවේලි මාර්ගය විවෘත කරයි.

Editor O

ජනාධිපතිවරණයේ දී මධ්‍යස්ථව කටයුතු කරනවා – හිටපු ජනාධිපති චන්ද්‍රිකා

Editor O

Leave a Comment