Trending News

விரைவில் பெண்களுக்கான பிரத்தியேக பஸ்…

(UTV|COLOMBO) விரைவில் பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவையொன்றைஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2 வாரங்களில் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இதன் முதல்கட்டதாக இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான 25 முதல் 30 பஸ்களை ஈடுபடுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பஸ் சேவையானது, தெரிவுசெய்யப்பட்ட நகரங்களிலும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது .

அலுவலக நேரங்களில் இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.

பெண்கள் மீதான துஷ்பிரயோக நடவடிக்கைகள் காரணமாகவே இந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

சோமாலியா வெடிகுண்டு தாக்குதல்; 90 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

டெங்கு நோய் மீண்டும் பரவும் அபாயம்

Mohamed Dilsad

Vladimir Putin wins by big margin

Mohamed Dilsad

Leave a Comment