Trending News

இந்தியா ராணுவ தொப்பி விவகாரம்-பாகிஸ்தான் குற்றச்சாட்டு

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் இராணுவ தொப்பி அணிந்து விளையாடியமையை மேற்கோள்காட்டி பாகிஸ்தான்  குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கிரிக்கெட்டுக்குள் இந்தியா அரசியலை உட்புகுத்தியுள்ளதாக, பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் இராணுவ தொப்பி அணிந்து விளையாடியிருந்தார்கள்.

அண்மையில் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த 40 இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் அவர்கள் இந்த செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன், போட்டியின் கொடுப்பனவை புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதாகவும் இந்திய அணி வீரர்கள் அறிவித்திருந்தனர்.

இது கிரிக்கெட் அரங்கில் முரணைத் தோற்றுவிக்கும் விடயம் எனவும் இதுகுறித்து ஐ.சி.சி. கவனம் செலுத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தது.

புல்வாமா பயங்கரவாதத் தாக்குலை அடிப்படையாகக் கொண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வேண்டும் என ஏற்கனவே இந்தியா அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், அந்த கருத்தை ஐ.சி.சி. நிராகரித்ததோடு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் விளையாடும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

நிகாப் மற்றும் புர்கா பயன்படுத்த முடியுமா? முடியாதா?

Mohamed Dilsad

குழந்தைகளை கொல்ல இணையத்தில் வழி தேடிய தாய்…

Mohamed Dilsad

හිටපු ජනාධිපතිවරුන්ගේ ආරක්ෂාව පිළිබඳ තක්සේරු වාර්තාවක් කැබිනට් මණ්ඩලයට

Editor O

Leave a Comment