Trending News

சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி வசதிகள்?

(UTV|COLOMBO) சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே இது தொடர்பில் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரீ.எம்.ஜே.டபிள்யூ.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

சில சிறைச்சாலைகளில் கைதிகள் இரகசியமான முறையில் தொலைபேசிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை தடுக்கும் நோக்கில் குடும்ப உறவினர்களுடன் மட்டும் தொடர்பு பேணக்கூடிய வகையிலான தொலைபேசி அழைப்பு வசதிகள் கைதிகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து கவனம் செலுத்தபபட்டு வருகிறது.

இதற்கமைய இந்த தொலைபேசி அழைப்புக்களுக்கான கட்டணங்கள் கைதிகளின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அறவீடு செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

உயிருக்கு போராடிய எலியை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

Mohamed Dilsad

Explosive items found by Navy

Mohamed Dilsad

“Sri Lanka interested in buying oil from Iran” – Envoy

Mohamed Dilsad

Leave a Comment