Trending News

சிறுநீரக மற்றும் இருதய நோயாளர்களுக்கான மருந்து ஊசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்து ஊசி வகைகள் மற்றும் இருதய நோயாளர்களுக்கு தேவையான ஊசி வகைகளை கொள்வனவு செய்ய சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, சிறுநீரக நோயாளர்களுக்கான ஏபோய்ட்டின் என்ற 850000 மருந்து ஊசிகளை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய இந்தியாவின்; Ms Relaince Science என்ற நிறுவனத்தில் 918000 அமெரிக்க டொலரில் கொள்னவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், இருதய நோயாளர்களின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான எனோக்சபாரின் சோடியம் என்ற மருந்து ஊசிகள் 690000 கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவையினால் நியிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய 1.82 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சீனாவின் Ms Shenzhen Techdow Pharmaceutical என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்கும் அமைச்சரவை இணங்கியுள்ளது.

 

 

 

 

Related posts

ඇඳිරි නීතිය ඉවත් කරයි.

Editor O

Death toll in Mexico fuel pipeline blast rises to 73, witnesses describe horror

Mohamed Dilsad

බස්නාහිර පළාතේ ගුරුවරුන්ට දැමූ තහංචිය, හකුලා ගනී.

Editor O

Leave a Comment