Trending News

வில்பத்து விவகாரம்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் அமைச்சர் ரிசாட் வலியுறுத்து…

(UTV|COLOMBO) வில்­பத்து வன பாது­காப்புப் பகு­தியில் ஆக்­கி­ர­மிப்­புகள் இடம் பெறு­வ­தாக முன்­வைக்­கப்­படும் குற்றச்சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­றவை. வில்­பத்து குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு 2017 இல் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் அறிக்கை உட­ன­டி­யாக வெளி­யி­டப்­பட வேண்டும். பல தட­வைகள் கோரிக்கை விடுக்­கப்­பட்டும் ஆணைக்குழுவின் அறிக்கை இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இத­னாலேயே பல்­வேறு சந்­தே­கங்கள் தொடர்கின்­றன என கைத்­தொழில், வர்த்­தகம் மற்றும் நீண்­ட­கா­ல­மாக இடம் பெயர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றல் மற்றும் கூட்­டு­றவு அபி­வி­ருத்தி அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

வில்­பத்து வன பாது­காப்பு பகுதி தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கை­யிலே அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்; ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி ரஷ்யாவுக்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்­த­போது அங்­கி­ருந்து மாவில்லு பாது­காக்­கப்­பட்ட வன பிர­தேசம் என 40 ஆயி­ரத்து 30 ஹெக்­டயர் நிலத்­தினை வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் வெளி­யிட்டார். இந்த நிலப்­ப­ரப்பில் மக்கள் குடி­யேற்ற நிலங்கள், மேய்ச்சல் நிலம், வயற்­கா­ணிகள் உள்­ள­டங்­கி­யி­ருந்­தன. மாவில்லு, வேப்பல், கர­டிக்­குழி, மறிச்­சுக்­கட்டி, விலாத்­திக்­குளம் ஆகிய பகு­திகள் இதில் உள்­ள­டங்­கி­யி­ருந்­தன. அதனால் அப்­ப­கு­தி­மக்கள் மறிச்­சுக்­கட்டி பள்­ளி­வாசல் முன்னால் 43 நாட்கள் சத்­தி­யாக்­கி­ரக போராட்டம் நடத்­தினர்.

சத்­தி­யாக்­கி­ர­கத்தின் 42 ஆவது நாளில் ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம் பெற்­றது. இதில் நான் உட்­பட அன்­றைய அமைச்சர் பைஸர் முஸ்­தபா, அசாத்­சாலி, முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் வை.எம்.எம்.ஏ உட்­பட சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டனர். இந்­தச்­சந்­திப்பின் போதே இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யினால் சுயா­தீன ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்கத் தீர்­மா­னிக்­கப்­பட்டு ஆணைக்­கு­ழுவும் நிய­மிக்­கப்­பட்­டது. ஆணைக்­குழு விசா­ர­ணை­களை மேற்­கொண்டு 3 மாத காலத்தில் அறிக்­கை­யையும் சமர்ப்­பித்­தது. ஆனால் இது­வரை அந்த ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. பல தட­வைகள் அறிக்­கையை வெளி­யி­டு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்டும் இது­வரை வெளி­யி­டப்­ப­டா­ம­லி­ருப்­ப­தற்கு என்ன காரணம் என்று தெரி­ய­வில்லை. பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வொன்றை நிய­மித்து அறிக்­கையை வெளி­யி­டு­மாறு கோரியும் பலன் ஏற்­ப­ட­வில்லை.

இந்த ஆணைக்­கு­ழுவை பௌத்த குரு ஒரு­வரின் தலை­மை­யி­லான குழு­வொன்று அச்­சு­றுத்­தியும் வந்­தது. தற்­போது மீண்டும் வில்பத்து வன பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக பொய்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முடிவு காணும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்த சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கை உடனடியாக வெளியிடப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

 

 

 

 

Related posts

Parliament unrest Inquiry Committee to convene today

Mohamed Dilsad

Lanka IOC reduces fuel prices

Mohamed Dilsad

Malaysian company secures USD 17 million contract to build storm water pumping station in Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment