(UTV|LONDON) தான் தாய்மையடைந்திருப்பதாக எமி ஜாக்ஷன் கூறியுள்ளார்.
மதராசப்பட்டினம் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன் லண்டனில் வசித்து வருகிறார். மதராசப்பட்டினம் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் தெறி, தனுஷின் தங்கமகன், விகரமுடன் ’ஐ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்துடன் இவர் ரோபோவாக நடித்திருந்த 2.0 படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் எமி ஜாக்சன் போகி மேன் என்ற ஆங்கிலப் படத்திலும் சூப்பர் கேர்ள் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில் தன்னுடைய காதலர் ஜார்ஜ் முத்தமிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர் தனது காதலையும் உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து இவர்களது திருமணம் கிரீஸ் நாட்டில் 2020-ம் ஆண்டில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் அதற்கு முன்னதாகவே தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமி ஜாக்சன் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், “நான் தாய்மையடைந்த இந்த தருணத்தை என் வீட்டு மொட்டை மாடியில் நின்று சத்தமாக சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. இந்த உலகத்தில் எதன்மீதும் இல்லாத தூய்மையான காதல் உன்னிடம் மட்டுமே உள்ளது. எங்களுடைய குழந்தையை சந்திக்க காத்திருக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2019/04/Capture12.png”]