Trending News

சிறிய நீர் மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க 3500 விண்ணப்பங்கள்

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில், சிறியளவிலான நீர் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக, 3,500 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், 75 மின் உற்பத்தி நிலையங்களையே அமைக்க முடியுமென, அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மின் உற்பத்தி நிலையங்கள், ஆறுகள், நதிகள் என்பவற்றின் நீரைப் பயன்படுத்தி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய பகுதிகளிலுள்ள, தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து, குறிப்பிடத்தக்களவு மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுவதாக, அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

 

Related posts

கராபிட்டியவில் புற்றுநோய் நிவாரண மையம்

Mohamed Dilsad

இரண்டாவது உலக யுத்த கால கப்பல் இலங்கை கடற்படையினரால் மீட்டெடுப்பு

Mohamed Dilsad

ஜனாதிபதியின் அதிரடி செய்தி

Mohamed Dilsad

Leave a Comment