Trending News

வீதி இல.138 ஹோமாகம – புறக்கோட்டை தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) வீதி இல.138 ஹோமாகம – புறக்கோட்டை தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பணிப்புறக்கணிப்பு  மாகும்புரவில் ஒன்றுக்கு மேற்பட்ட போக்குவரத்து மத்திய நிலையங்கள் கட்டப்பட்டு வருவதால், தமது பயண நடவடிக்கைகளுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே முன்னெடுக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வீதி இல 122, அவிசாவளை – புறக்கோட்டை, வீதி இல 125 பாதுக்கை – புறக்கோட்டை மற்றும் வீதி இல 124 மகரகம – இஹல போபே ஆகிய சேவைகளும் பயண சேவைகளில் இருந்து விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

Mackie in talks for “Woman in the Window”

Mohamed Dilsad

ශ්‍රීපාද වන්දනා සමය ඇර⁣ඹේ…..

Editor O

Lankan arrested in Kerala without valid travel papers

Mohamed Dilsad

Leave a Comment