கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களை உலக நாடுகள் பல கண்டித்துள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டர் பதிவில், மிலேட்சத்தனமான செயலுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்துள்ளதாக இந்த செய்தியில், பயங்காரவாத செயற்பாடுகளுக்கு எதிராக போரிட வேண்டும் எனவும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இந்திய பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்
இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவித் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தமது தமது சோகத்தை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Strongly condemn the horrific blasts in Sri Lanka. There is no place for such barbarism in our region. India stands in solidarity with the people of Sri Lanka. My thoughts are with the bereaved families and prayers with the injured.
— Narendra Modi (@narendramodi) April 21, 2019
The acts of violence against churches and hotels in Sri Lanka are truly appalling, and my deepest sympathies go out to all of those affected at this tragic time.
We must stand together to make sure that no one should ever have to practise their faith in fear.
— Theresa May (@theresa_may) April 21, 2019
Strongly condemn the horrific terrorist attack in Sri Lanka on Easter Sunday resulting in precious lives lost & hundreds injured. My profound condolences go to our Sri Lankan brethren. Pakistan stands in complete solidarity with Sri Lanka in their hour of grief.
— Imran Khan (@ImranKhanPTI) April 21, 2019